பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை


பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை
x
தினத்தந்தி 22 July 2021 8:27 PM GMT (Updated: 2021-07-23T01:57:56+05:30)

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


சென்னை,

தமிழ் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் சாண்டி மாஸ்டர்.  அவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.  இறுதி வரை சென்று 2வது வெற்றியாளராக தேர்வானார்.

இவரது மனைவி சில்வியா. அவர்களுக்கு 3 வயதில் சூசன்னா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில்வியா 2வது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் சாண்டி கூறினார்.

இதனை முன்னிட்டு கோலாகலமாக வளைகாப்பு விழாவும் நடைபெற்றது.  இதில், ரோபோ சங்கர், ரியோ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.  இந்த நிலையில் சாண்டியின் மனைவி சில்வியாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.  இதனை அவர் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர், தனது குழந்தையுடனான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு உள்ளார்.  அவருக்கு முகேன், சோம் சேகர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.  நடன இயக்குனராக உள்ள சாண்டி, சுருதி செல்வமுடன் நடித்த படம் திரைக்கு வர உள்ளது.


Next Story