சினிமா செய்திகள்

சற்குணம் டைரக்‌ஷனில் ராஜ்கிரண்-அதர்வா + "||" + Rajkiran-Adarva in Charity Direction

சற்குணம் டைரக்‌ஷனில் ராஜ்கிரண்-அதர்வா

சற்குணம் டைரக்‌ஷனில் ராஜ்கிரண்-அதர்வா
‘களவாணி, ’ ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய டைரக்டர் சற்குணம் அடுத்து இயக்கும் புதிய படத்தில், ராஜ்கிரண்-அதர்வா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகி முடிவாகவில்லை.
ராஜ்கிரண், அதர்வாவுடன் ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், ரவிகாளே, சி.வி.குமார், சிங்கம் புலி, பாலசரவணன், துரை சுதாகர் ஆகியோரும் நடிக் கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

‘‘குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு படம், இது. யதார்த்தமான காட்சிகளுடன் கூடிய கதை. காவிரி ஆற்றுப் படுகை, வெற்றிலை தோட்டம் என பசுமையாக இருக்கும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது’’ என்று டைரக்டர் சற்குணம் கூறினார்.