சினிமா செய்திகள்

‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது: கமல்ஹாசனுக்கு வில்லனாக மலையாள நடிகர் + "||" + Filming of ‘Vikram’ has started: Malayalam actor as the villain for Kamal Haasan

‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது: கமல்ஹாசனுக்கு வில்லனாக மலையாள நடிகர்

‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது: கமல்ஹாசனுக்கு வில்லனாக மலையாள நடிகர்
கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது. பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.
கமல்ஹாசன் நடித்து, ‘விக்ரம்’ என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளிவந்தது. அதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை டிம்பிள் கபாடியா நடித்து இருந்தார். மறைந்த டைரக்டர் ராஜசேகர் இயக்கியிருந்தார்.

நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின், ‘விக்ரம்’ என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக் கிறார்கள். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

இருவரும் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.