சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு + "||" + 2nd poster release of JaiBhim movie

ஜெய்பீம் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு

ஜெய்பீம் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு
நடிகர் சூர்யா நடிக்கும் ஜெய்பீம் படத்தின் 2-வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி நேற்று மாலை முதல் பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்தவகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வருகிறது ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தின் டைட்டில் மற்றும் மூன்று போஸ்டர்களை நேற்றிலிருந்து ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது படக்குழு. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

நேற்று சூர்யாவின் 40வது படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சில் தினங்களுக்கு முன் வெளியிட்டது. பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடிக்கும் சூர்யாவின் இப்படத்திற்கு ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மிரட்டலான லுக்கில் சூர்யா இருக்கும் இந்த போஸ்டரை பார்த்தாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.