சினிமா செய்திகள்

சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி + "||" + Actor Akshay Kumar donates Rs 50 lakh to cinema artists

சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி

சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி
சினிமா கலைஞர்களுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.50 லட்சம் உதவி.
கொரோனா பரவலால் பல மாதங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வில் குறைந்த எண்ணிக்கை ஆட்களோடு படப்பிடிப்புகள் நடக்கின்றன.


தியேட்டர்கள் இன்னும் மூடிக்கிடக்கின்றன. இதனால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி, நடிகர் நடிகைகளிடம் நிதி திரட்டி உதவி வருகிறது.

இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த திரைப்பட கலைஞர்களுக்கு உதவ ரூ.50 லட்சம் நிதி வழங்கி உள்ளார். அக்‌ஷய்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா சினிமா கலைஞர்களுக்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு மக்கள் உதவியாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.4.20 லட்சம் தப்பியது
பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.4.20 லட்சம் தப்பியது
2. அக்டோபர் மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அக்டோபர் மாதத்துக்குள் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
3. வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சம் கொள்ளை
வெல்டிங் மெஷின் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4. சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்
சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்.
5. புனேவில் இருந்து 13½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.