சினிமா செய்திகள்

கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம் + "||" + Problems with husband? Piriyamani Description

கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்

கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்
கணவருடன் பிரச்சினையா? பிரியாமணி விளக்கம்.
நடிகை பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் நடந்த திருமணம் செல்லாது என்று முஸ்தபாவின் முதல் மனைவி ஆயிஷா எதிர்ப்பு கிளப்பி இருப்பது பரபரப்பாகி உள்ளது.

இதுகுறித்து ஆயிஷா கூறும்போது, “என்னை முஸ்தபா இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. நாங்கள் பிரிந்து இருந்தாலும் இன்னும் அவர் எனது கணவர்தான். பிரியாமணி, முஸ்தபாவின் திருமணம் சட்டப்படி செல்லாது’’ என்றார்.


இதனால் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாகவும், கணவருடன் அவருக்கு சுமுக உறவு இல்லை என்றும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், “எனது கணவர் முஸ்தபாவும், நானும் எங்களுடைய உறவில் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறோம். அவர் தற்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒருவருக்கொருவர் தினமும் பேசிக்கொள்கிறோம். வேலையில் அவர் பிஸியாக இருந்தால் செல்போனில் குறுந்தகவல் அனுப்பி நலம் விசாரிப்பார். வேலை முடிந்ததும் என்னை அழைப்பார். அதுபோல் நான் படப்பிடிப்பில் பிஸியாக பேசமுடியாத நிலையில் இருந்தாலும் குறுஞ்செய்தி அனுப்பி நலம் விசாரிப்பேன்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் ரெயில் நிலையம் அருகே கருணாநிதி சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி அளிக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
2. ‘டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது’ செந்தில்பாலாஜி விளக்கம்
அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடந்ததாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
3. சத்துணவு மையங்களில் தரமற்ற முட்டைகள் வழங்கவில்லை - தமிழக அரசு விளக்கம்
எந்த சத்துணவு மையத்திலும் தரமற்ற முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4. கோவில் விழாக்களில் பக்தர்கள் அனுமதி: அமைச்சர் விளக்கம்
கோவில் விழாக்களில் பக்தர்களை அனுமதிப்பது பற்றி முதல்-அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
5. போலீஸ் துன்புறுத்தலால் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலையா? போலீஸ் கமிஷனர் விளக்கம்
லஞ்ச ஒழிப்பு போலீசார் துன்புறுத்தலால் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலையா? என்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.