சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களை சாடிய பிரியா வாரியர் + "||" + Priya Warrior slandering fans on website

வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களை சாடிய பிரியா வாரியர்

வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களை சாடிய பிரியா வாரியர்
வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களை சாடிய பிரியா வாரியர்.
மலையாளத்தில் தயாரான ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடிக்கும் காட்சி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சில நண்பர்களுடன் ரஷியாவுக்கு சுற்றுலா சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியர் புகைப்படங்களை மட்டும் சிலர் தனியாக எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து அவரை மோசமாகவும், அவதூறாகவும் விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.


இது பிரியா வாரியருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பிரியாவாரியர் கூறும்போது, “என் நண்பர்களுடன் பயணித்த வீடியோ காட்சிகளுக்கு முட்டாள்தனமான பெயர்கள் வைத்து அதன் பின்னணியை ஆராயாமல் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. நான் எப்படி வாழ்கிறேன். என் நண்பர்களுடன் எப்படி இருக்கிறேன். என்ன செய்கிறேன் என்பதெல்லாம் எனது சொந்த விஷயம். எனவே உங்களுடைய கருத்துகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. வலைத்தளத்தில் பரவும் இளம் நடிகையின் ஆபாச வீடியோ
பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களும் உள்ளனர்.
2. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை - தமிழக காவல்துறை
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.