சினிமா செய்திகள்

சினிமாவில் 16 ஆண்டுகள் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அனுஷ்கா + "||" + Anushka thanks fans for 16 years in cinema

சினிமாவில் 16 ஆண்டுகள் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அனுஷ்கா

சினிமாவில் 16 ஆண்டுகள் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அனுஷ்கா
அனுஷ்கா நடிகையாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் யோகா ஆசிரியையாக இருந்தார். 2005-ல் தெலுங்கில் சூப்பர் படத்தில் அறிமுகமானார்.
அனுஷ்கா நடிகையாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் யோகா ஆசிரியையாக இருந்தார். 2005-ல் தெலுங்கில் சூப்பர் படத்தில் அறிமுகமானார். தமிழில் சிங்கம், என்னை அறிந்தால், லிங்கா, வேட்டைக்காரன், தாண்டவம். இரண்டாம் உலகம், இஞ்சி இடுப்பழகி, தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் திறமையை வெளிப்படுத்தினார். விருதுகளும் பெற்றுள்ளார். 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.


அனுஷ்காவுக்கு இப்போது 39 வயது ஆகிறது. இந்த நிலையில் சினிமாவில் 16 ஆண்டுகள் நீடிப்பதற்காக ரசிகர்களுக்கு அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. தங்கள் வாழ்க்கை நேரத்தை எடுத்து எனது வாழ்க்கையில் வித்தியாசங்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி. என்மீது அன்பு காட்டுபவர்களுக்கும். அனைத்து படக்குழுவினருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் குளிக்க வைக்க சிம்பு அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி
முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் படத்தில் நடித்திருக்கும் கார்த்தி, அண்ணன் சூர்யாவிற்கு நன்றி சொல்லி இருக்கிறார்.
3. எனிமி பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் எனிமி படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
4. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி: வாக்காளர்களுக்கு கே.எஸ்.அழகிரி நன்றி.
5. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான அரசாணை: மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.