சினிமா செய்திகள்

"பிரபாஸ் 21" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு + "||" + Project K begins, Prabhas welcomes Amitabh Bachchan: ‘Honour for me to clap for the Guru of Indian cinema’

"பிரபாஸ் 21" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

"பிரபாஸ் 21" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்   - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனின் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்

"தேசிய விருது" இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், அதற்குப் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ‘ராதே ஷியாம்’ படத்தில் நடித்து வந்த பிரபாஸ் தற்போது படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், இன்று ‘குரு பூர்ணிமா’வை முன்னிட்டு வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் ’பிரபாஸ் 21’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனின் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அமிதாப் பச்சன் இதற்காக ஐதராபாத் வந்து உள்ளார். அவர் தனது "புதிய படத்தின்" முதல் நாள் படப்பிடிப்பில்   கலந்து கொள்வார் என்று டுவீட் செய்ததால் இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "மகாநடி" கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. தமிழில் "நடிகையர் திலகம்" என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததோடு, சிறந்த தெலுங்கு மொழி படம் என்ற மற்றொரு தேசிய விருதும் "மகாநடி" க்கு கிடைத்தது. தேசிய விருதுகளைக் குவித்த இப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின்தான், தற்போது ’பிரபாஸ் 21’ படத்தை இயக்குகிறார்.தொடர்புடைய செய்திகள்

1. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை- நடிகர் சோனு சூட்
ராஜ்யசபை எம்.பி. ஆகும் வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்ததாக நடிகர் சோனு சூட் கூறி உள்ளார்.
2. நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளை
நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் ரூ.2. லடசம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
3. அரசியல், விவேக், தி.மு.க. ஆட்சி குறித்து நடிகர் வடிவேலு மனந்திறந்த பேட்டி- வீடியோ
இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன் என நடிகர் வடிவேலு கூறி உள்ளார்.
4. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது
நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் மரணம்
படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற அக்‌ஷய் குமாருக்கு அவரது தாயார் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.