சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு திரைப்படம்: டிரைலர் வெளியீடு ரசிகர்கள் வரவேற்பு + "||" + The project starring Aishwarya Rajesh is two films

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு திரைப்படம்: டிரைலர் வெளியீடு ரசிகர்கள் வரவேற்பு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு திரைப்படம்:  டிரைலர் வெளியீடு ரசிகர்கள் வரவேற்பு
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
சென்னை,

சிக்ஸர் எண்டர்டெயின்மென்ட் மினி ஸ்டுடியோ தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் திட்டம் இரண்டு. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் கிரைம் திரில்லர் கதையைக் கொண்டது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூடன் நடிகர்கள் நவகீதன், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சோனிலைவ் ஓடிடி தளத்தில் ஜூலை 30ஆம் தேதி வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தில் சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. திரைப்படத்தின் டிரைலருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.