சினிமா செய்திகள்

‘‘அம்மான்னு கூப்பிடாதே’’ என்று கண்டித்த முன்னாள் கதாநாயகி! + "||" + The former heroine who condemned "Don't call mom"!

‘‘அம்மான்னு கூப்பிடாதே’’ என்று கண்டித்த முன்னாள் கதாநாயகி!

‘‘அம்மான்னு கூப்பிடாதே’’ என்று கண்டித்த முன்னாள் கதாநாயகி!
‘‘அம்மான்னு கூப்பிடாதே’’ என்று கண்டித்த முன்னாள் கதாநாயகி!.
மனோரமாவுக்கு அடுத்தபடியாக 1,500 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை, ரமாபிரபா. நீண்ட இடைவெளிக்கு பின், ‘எப்போ கல்யாணம்?’ என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இடைவெளிக்கு காரணம் என்ன? என்பதை அவர் விளக்கினார்.

‘‘என் முதல் தமிழ் படம், ‘செல்வம்.’ 1964-ல் திரைக்கு வந்தது. முதல் படத்திலேயே ‘நடிகர் திலகம்’ சிவாஜியுடன் நடிக்கிற அதிர்ஷ்டம் அமைந்தது. அந்த படத்துக்கு பின், நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தன. இதற்காக ஆந்திரா பக்கம் ஒதுங்கி விட்டேன்.


இருப்பினும் தமிழ் பட உலகை விட்டு நான் ஒரேயடியாக விலகவில்லை. நல்ல பட வாய்ப்புகள் வந்தால் ஏற்றுக்கொண்டு நடிப்பேன். பழைய நடிகைகளில் சாவித்ரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் டைரக்டராக மாறிய பின், அவருடன் நான் உதவி டைரக்டர் போல் இருந்தேன். கடைசியாக அவரை ‘கோரின் டாகு’ என்ற தெலுங்கு படப்பிடிப்பில் பார்த்தேன்.

அதன் பிறகு அவரை பார்க்கவில்லை. என் மீது அதிக பாசமாக இருந்தார். அவரை நான், ‘‘அக்கா’’ என்றுதான் அழைப்பேன். அந்த சமயத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் கதாநாயகியை நான், ‘‘அம்மா’’ என்று அழைத்து விட்டேன். உடனே அவருக்கு கோபம் வந்து விட்டது. ‘‘என்னை அம்மான்னு அழைக்காதே...அக்கான்னு கூப்பிடு’’ என்றார். அதைப்பார்த்துக்கொண்டிருந்த சாவித்ரி, ‘‘இனிமேல் என்னை நீ அம்மா என்றே கூப்பிடலாம்’’ என்றார். இப்படி அவர் சொன்னது, அந்த நடிகைக்கு பதில் சொல்வது போல் இருந்தது.

‘எப்போ கல்யாணம், ’ ஒரு நகைச்சுவை படம். இதில் நான் கதாநாயகனுக்கு பாட்டியாக நடிக்கிறேன்’’ என்றார்.