சினிமா செய்திகள்

கமலுடன் பகத் பாசில் + "||" + Bhagat Basil with Kamal

கமலுடன் பகத் பாசில்

கமலுடன் பகத் பாசில்
மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பகத் பாசில் தமிழில் வேலைக்காரன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதியும் இன்னொரு வில்லனாக வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கமல்ஹாசன் பகத் பாசில் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் பகத் பாசில் செல்பி எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகிறது. விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் திரிஷ்யம் 2 படத்தின் ரீமேக்காக தயாராகும் பாபாநாசம் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. “அநீதியான தேர்வை மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்” - கமல்ஹாசன்
ஓர் அநீதியான தேர்வை 1.10 லட்சம் மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. வீடு மாறிய கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள தனது பாரம்பரிய வீட்டில் வசித்து வந்தார்.
3. தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி அண்மையில் தி.மு.க.வில் இணைந்தவர் டாக்டர் ஆர்.மகேந்திரன்.
4. சட்டமன்ற மேல்சபை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிடவேண்டும்: கமல்ஹாசன்
சட்டமன்ற மேல்சபை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிடவேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
5. கிழக்கிந்திய கம்பெனி போல, வடக்கில் பா.ஜ.க. வடக்கிந்திய கம்பெனியாக உள்ளது - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மேகதாது விஷயத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.