சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில் சூர்யா + "||" + Surya in new look

புதிய தோற்றத்தில் சூர்யா

புதிய தோற்றத்தில் சூர்யா
சூரரை போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்துக்கு எதற்கும் துணிந்தவன் என்று பெயர் வைத்துள்ளனர். இது சூர்யாவுக்கு 40-வது படம் ஆகும்.
கல்விக்காக குரல் கொடுத்து வரும் சூர்யாவின் கருத்துக்கள் இந்த படத்தில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக வருகிறார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் சில தினங்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்கும் சூர்யா தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் ரத்தக்கறையுடன் உள்ள வாளை வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக உட்கார்ந்து இருக்கிறார். இந்த தோற்றத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்த படத்துக்கு பிறகு வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து தயாராகிறது. இதில் சூர்யா ஜல்லிக்கட்டு வீரராக வருகிறார்.