சினிமா செய்திகள்

திகில் படத்தில் நயன்தாரா + "||" + Nayanthara in the horror film

திகில் படத்தில் நயன்தாரா

திகில் படத்தில் நயன்தாரா
நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளார். மாயா படத்தில் பேயாகவும் வந்தார். தற்போது இன்னொரு திகில் கதையிலும் நடிக்கிறார்.
குடும்ப உறவுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திகில் படமாக எடுக்கின்றனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதை புதுமுக இயக்குனர் விக்னேஷ் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. மதுரையிலும். சென்னையிலும் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். நயன்தாராவுக்கு ஏற்கனவே ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இதில் நெற்றிக்கண் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு பார்வையற்றவர் கதாபாத்திரம். நெற்றிக்கண் படம் விரைவில் வெளியாக உள்ளது. 

அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. மேலும் 6 புதிய படங்களில் நடிக்கவும் நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். 2 தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு இருக்கிறார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை