சினிமா செய்திகள்

ராமனாக நடிக்க மறுத்த மகேஷ்பாபு + "||" + Maheshbabu refuses to act as God Ram

ராமனாக நடிக்க மறுத்த மகேஷ்பாபு

ராமனாக நடிக்க மறுத்த மகேஷ்பாபு
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் வெளியான ஶ்ரீராமராஜ்ஜியம் படத்தில் ராமராக பாலகிருஷ்ணாவும் சீதையாக நயன்தாராவும் நடித்து இருந்தனர்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆதிபுருஷ் என்ற பெயரில் ராமாயண கதை படமாகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இன்னொரு ராமாயண படமும் தயாராகிறது. இந்த படத்தை 3 டி தொழில் நுட்பத்தில் எடுக்கின்றனர். நிதிஷ் திவாரி, ரவி உடையார் ஆகியோர் இயக்குகிறார்கள். இதில் ராமராக நடிக்க முதலில் ஹிருத்திக் ரோஷனை அணுகினார்கள். பின்னர் அவருக்கு பதிலாக மகேஷ்பாபு முகம் ராமருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரை தேர்வு செய்தனர். படப்பிடிப்பை விரைவில் தொடங்கவும் திட்டமிட்டனர். ஆனால் தற்போது ராமராக நடிக்க மகேஷ்பாபு மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மகேஷ்பாபுவுக்கு பதிலாக வேறு நடிகரை தேர்வு செய்கிறார்கள்.