சினிமா செய்திகள்

சமூக சேவைக்கு மாறிய பூஜா ஹெக்டே + "||" + Pooja Hegde converted to community service

சமூக சேவைக்கு மாறிய பூஜா ஹெக்டே

சமூக சேவைக்கு மாறிய பூஜா ஹெக்டே
தமிழில் முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
பூஜா ஹெக்டே அளித்த பேட்டி வருமாறு:-

“சமூக சேவை செய்வதில் எனக்கு ஆர்வம் உள்ளது. இந்த சமூகம் எனக்கு எவ்வளவோ கொடுத்து இருக்கிறது. எனது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதற்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும். அதனால்தான் புதிதாக தொண்டு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன். சிறிய அளவிலோ அல்லது பெரிதாகவோ சமூகத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை தொண்டு நிறுவனம் மூலம் செய்ய முடிவு செய்ய இருக்கிறேன். அன்பு என்பது சக்தி வாய்ந்த உணர்ச்சி. அந்த அன்பினாலேயே இந்த சமூகத்துக்கு எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். அன்பால் செய்யும் 
எந்த சேவையாக இருந்தாலும் உலகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவர காரணமாக அமையும். பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கிறவர்களுக்கு, கஷ்டப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் எனது தொண்டு நிறுவனம் செய்யும்.’'

இவ்வாறு பூஜா ஹெக்டே கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் பூஜா ஹெக்டே
ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் பூஜா ஹெக்டே.
2. கொரோனாவில் சிக்கிய கங்கனா, பூஜா ஹெக்டே பகிர்ந்த அனுபவங்கள்
கொரோனாவில் சிக்கிய கங்கனா, பூஜா ஹெக்டே இருவரும் அனுபவங்களை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
3. படப்பிடிப்பு எப்போது? விஜய் படத்துக்காக பல கோடி செலவில் போடப்பட்ட அரங்கு
விஜய் இப்போது தனது 65-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடை பெற்றது. அதில் விஜய் 10 நாட்கள் கலந்து கொண்டு நடித்தார்.
4. விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடி சம்பளம்?
மாஸ்டர் படத்துக்கு பிறகு சில வாரங்கள் ஓய்வில் இருந்த விஜய் இப்போது புதிய படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார்.