சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார் + "||" + veteran actress jayanthi passes away

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்
ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.
சென்னை

மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயந்தி காலமானார்.

எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.

ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார். எம்.ஜி.ஆரு.டன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளிவிழா, புன்னகை, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்த ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய்க்கும் எனக்கும் பிரச்சினை இருப்பது உண்மைதான்...! ஆனால்...? - எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
2. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை- நடிகர் சோனு சூட்
ராஜ்யசபை எம்.பி. ஆகும் வாய்ப்பை இரண்டு முறை நிராகரித்ததாக நடிகர் சோனு சூட் கூறி உள்ளார்.
3. நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளை
நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் ரூ.2. லடசம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
4. அரசியல், விவேக், தி.மு.க. ஆட்சி குறித்து நடிகர் வடிவேலு மனந்திறந்த பேட்டி- வீடியோ
இயக்குனர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க வாய்ப்பே இல்லை. அந்த பக்கமே செல்லமாட்டேன் என நடிகர் வடிவேலு கூறி உள்ளார்.
5. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது
நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.