சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராயை சந்தித்த வரலட்சுமி + "||" + Varalakshmi meets Aishwarya Rai

ஐஸ்வர்யா ராயை சந்தித்த வரலட்சுமி

ஐஸ்வர்யா ராயை சந்தித்த வரலட்சுமி
தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
இதில் மந்தாகினி, நந்தினி ஆகிய 2 கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக்பச்சன் ஆகியோரை சந்தித்து பேசினர். இவர்கள் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வரலட்சுமி போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, மாரி 2, நீயா, வெல்வெட் நகரம், சேசிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் கைவசம் மேலும் 7 படங்கள் உள்ளன.