சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: கன்னட நடிகர் சுதீப் + "||" + Surya should have been awarded the Oscar: Actor Sudeep

ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: கன்னட நடிகர் சுதீப்

ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர் சூர்யா: கன்னட நடிகர் சுதீப்
சூர்யா நடித்து கடந்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி தேர்வாகவில்லை.
சூரரை போற்று இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்தநிலையில் நான் ஈ, புலி, பாகுபலி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கன்னட நடிகர் சுதீப் அளித்துள்ள பேட்டியில், “சூரரை போற்று படத்தை ஓ.டி.டி.யில் பார்த்தேன். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு சூர்யா தகுதியானவர். அந்த படத்தில் 
பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஒரு படத்தை பார்ப்பதும் கதையாக படிப்பதும் வெவ்வேறானது. இந்த படம் கதாநாயகனை கொண்டாடும் படம் இல்லை. இதில் நடிக்க அவர் முன்வந்ததற்கு பெரிய துணிச்சல் வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. அமிதாப்பச்சன் பாராட்டில் நெகிழ்ந்த சூர்யா
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்தது.
3. கிரிக்கெட் வீரர் கதையில் சூர்யா?
கிரிக்கெட் வீரர்கள் தெண்டுல்கர், தோனி வாழ்க்கை கதைகள் சினிமா படங்களாக வந்துள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சி நடப்பதாக தகவல் பரவி வருகிறது.
4. பொள்ளாச்சி சம்பவம் கதையில் சூர்யா
சூர்யா சூரரை போற்று படத்துக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 40-வது படம்.
5. 3 படங்களில் சூர்யா
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் சூரரைபோற்று படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் போட்டிக்கும் சென்று வந்தது.