சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம் + "||" + Vijay Sethupathi Movie Part 2

விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்

விஜய் சேதுபதி படம் 2-ம் பாகம்
விஜய்சேதுபதி, நந்திதா ஜோடியாக நடித்து 2012-ல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் பெரிய வெற்றி பெற்றது. முழு நீள நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது.
கோகுல் இயக்கினார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் கதாநாயகனாக சந்தானம் நடிப்பதாக தகவல் கசிந்தது. இதுவும் நகைச்சுவை படம் என்பதால் சந்தானம் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தனர். ஆனால் தற்போது சந்தானத்துக்கு பதிலாக சிம்புவை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2-ம் பாகத்தில் விஜய்சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கில் சிக்கிக் கொண்ட ஒரு இளைஞனை பற்றிய கதையம்சம்  உள்ள படமாக தயாராகிறது. நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உருக்கமான பேச்சு
விஜய் சேதுபதி தயாரித்து நடித்த ‘லாபம்’ படத்தை மறைந்த டைரக்டர் ஜனநாதன் இயக்கியிருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.
2. விஜய் சேதுபதி, வீரப்பன் வேடத்தில் நடிக்கிறாரா?
தேசிய அளவில் பிரபலமாகி இருக்கும் டைரக்டர் வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
3. முககவசம் அணியாததால் சர்ச்சையில் விஜய் சேதுபதி
கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தியேட்டர்களில் ஒரு இருக்கை விட்டு இருக்கை பார்வையாளர்களை அமர வைக்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
4. விஜய் சேதுபதி காட்டம்
நடிகர் விஜய்சேதுபதி ஓட்டு போட்டு விட்டு நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஓட்டு போட்டு இருக்கிறேன். வாழ்க ஜனநாயகம். நன்றி'' என்றார்.