சினிமா செய்திகள்

வெற்றி படங்களால் தமன்னா மகிழ்ச்சி + "||" + Tamanna is happy with the hit films

வெற்றி படங்களால் தமன்னா மகிழ்ச்சி

வெற்றி படங்களால் தமன்னா மகிழ்ச்சி
தமன்னா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பாகுபலி, வீரம், தர்மதுரை, தேவி என்று பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் தமன்னா நடித்த படங்கள் நல்ல வசூல் பார்த்தன.
இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தியில் ஹிம்மத்வாலா, ஹம்ஷகல்ஸ், எண்டெர்டெயின்மெண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தாலும் அவை வரவேற்பை பெறவில்லை. 

இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், “எனக்கு தென்னிந்திய மொழி படங்களில்தான் அதிக வெற்றி படங்கள் அமைந்துள்ளன. தென்னிந்திய மொழியில் அதிக எண்ணிக்கையில் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள். அவர்கள் என் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருக்கிறார்கள். எனது நடிப்பு சம்பந்தமான பணிகள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்று சேரும் என்று நம்புகிறேன். எல்லா துறைகளிலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரிதான் வேலைகள் நடக்கின்றன. ஆனாலும் வெற்றி கிடைக்கும் போதுதான் நமக்கு ஆதரவு கிடைக்கிறது'' என்றார். தமன்னா தற்போது 5 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.