சினிமா செய்திகள்

நகைச்சுவைக்கு பதில் குணச்சித்திர வேடத்தை விரும்பும் யோகிபாபு + "||" + Wanting a character role, Yogibabu

நகைச்சுவைக்கு பதில் குணச்சித்திர வேடத்தை விரும்பும் யோகிபாபு

நகைச்சுவைக்கு பதில் குணச்சித்திர வேடத்தை விரும்பும் யோகிபாபு
“சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாபாத்திரங்கள் மிக வலிமையானது. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார் யோகிபாபு. கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். நகைச்சுவை மட்டுமன்றி குணச்சித்திர வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறார்.

இதுகுறித்து யோகிபாபு அளித்துள்ள பேட்டியில், “சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாபாத்திரங்கள் மிக வலிமையானது. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். நகைச்சுவையில் சாதனை படைத்த தமிழ் சினிமாவின் மூத்த ஆளுமைகளான நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனதை கவர்ந்துள்ளனர். ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணியும், நீர்க்குமிழி படத்தில நாகேசும் நகைச்சுவைக்கு எதிரான குணச்சித்திர வேடத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினர். அதேபோல் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நகைச்சுவை மட்டுமன்றி குணச்சித்திர வேடங்களிலும் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்.

“நவரசா” ஆந்தாலஜி படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி, நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. மேலும் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.