சினிமா செய்திகள்

அண்ணாத்த படத்துக்கு ‘டப்பிங்' பேசிய ரஜினி + "||" + Rajini speaks 'dubbing' for Annatha movie

அண்ணாத்த படத்துக்கு ‘டப்பிங்' பேசிய ரஜினி

அண்ணாத்த படத்துக்கு ‘டப்பிங்' பேசிய ரஜினி
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த இதன் படப்பிடிப்புகளில் அதிக நாட்கள் பங்கேற்று நடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து சென்னை திரும்பி மீண்டும் விடுபட்ட காட்சிகளுக்காக இரண்டு நாட்கள் நடித்து கொடுத்தார்.
தற்போது ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்துள்ளதால் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. ரஜினிகாந்த் ஸ்டுடியோவுக்கு சென்று டப்பிங் பேசினார். கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட பிற தொழில்நுட்ப பணிகளும் தொடங்கி உள்ளன.

தீபாவளி பண்டிகையில் அண்ணாத்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார். அண்ணாத்த பட வேலைகள் முடிந்ததும் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் புதிய படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அந்தகன்’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் யோகிபாபு
பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘அந்தகன்’ திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
2. மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூலை 12ஆம் தேதி சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
3. அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனையை முடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
4. அமெரிக்காவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா தனுஷ்...! வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார்.
5. அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்
மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகந்த் இன்று காலை தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.