5 மொழிகளில் விஜய் படம்


5 மொழிகளில் விஜய் படம்
x
தினத்தந்தி 29 July 2021 5:42 AM GMT (Updated: 2021-07-29T11:12:34+05:30)

விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 65-வது படம். ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது.

தற்போது சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். படத்தை பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். கொரோனாவால் ரிலீஸ் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பிருந்தாவனம், பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார். விஜய்யின் 66-வது படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடி படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.

Next Story