சினிமா செய்திகள்

அதிரடி கதை விஷாலின் 32-வது படம் + "||" + Action story Vishal 32nd film

அதிரடி கதை விஷாலின் 32-வது படம்

அதிரடி கதை விஷாலின் 32-வது படம்
விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து இருக்கிறார். இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
விஷால் நடித்து 2019-ல் அயோக்யா, ஆக்‌ஷன் படங்கள் வந்தன. தற்போது எனிமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்து இருக்கிறார். இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

எனிமி படத்துக்கு பிறகு து.ப.சரவணன் இயக்கும் படத்தில் விஷால் நடித்து வருகிறார். அதிகாரம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியன் கதை கருவில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இது விஷாலுக்கு 31-வது படம்.

இந்த படத்துக்கு பிறகு விஷால் நடிக்கும் 32-வது படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடிகர்கள் நந்தா, ரமணா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இவர்கள் விஷாலுக்கு நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் டைரக்டு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகிறது. விஷால் நடித்து வந்த துப்பறிவாளன் 2-ம் பாகம் படம் இயக்குனர் மிஷ்கினுடன் எற்பட்ட மோதலால் முடங்கி உள்ளது. இந்த படத்தை மிஷ்கினுக்கு பதில் விஷாலே இயக்க இருக்கிறார்.