ராஜ்குந்த்ராவுடன் தொடர்பு; ஆபாச பட வழக்கில் சிக்கும் நடிகைகள்


ராஜ்குந்த்ராவுடன் தொடர்பு; ஆபாச பட வழக்கில் சிக்கும் நடிகைகள்
x
தினத்தந்தி 30 July 2021 1:52 AM GMT (Updated: 2021-07-30T07:22:03+05:30)

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றி பணம் சம்பாதித்த புகாரில் ராஜ்குந்த்ரா கைதானது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்த நடிகைகளையும், தொழில் ரீதியாக அவருடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகளையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து சம்மன் அனுப்பி வருகிறார்கள். அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ராஜ் குந்த்ராவுடன் தொடர்பில் இருந்த பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சம்மன் அனுப்பியதால் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றுள்ளார். இவர் தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் கஜேந்திரா, திண்டுக்கல் சாரதி, குஸ்தி படங்களில் நடித்துள்ள புளோராவுக்கும் ராஜ்குந்த்ராவுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.  ஆபாச படம் எடுத்ததில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், ராஜ்குந்த்ரா எடுத்த படங்களில் நான் வேலை செய்யவில்லை என்றும் புளோரா மறுத்துள்ளார்.

இதுபோல் நடிகை ஜெலினா ஜெட்லியும் மறுத்து இருக்கிறார். ராஜ்குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்த நடிகைகள் தங்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் வெப் தொடர் என்று பொய் சொல்லியும் ஆபாச படங்களில் நடிக்க வைத்து விட்டதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

Next Story