சினிமா செய்திகள்

காணாமல் போன கதாநாயகியும்... துப்பறியும் கதாநாயகனும்... + "||" + The missing heroine ... the detective heroine ...

காணாமல் போன கதாநாயகியும்... துப்பறியும் கதாநாயகனும்...

காணாமல் போன கதாநாயகியும்... துப்பறியும் கதாநாயகனும்...
மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் தேர்ந்தவர், அருள்நிதி. தற்போது, ‘தேஜாவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மாறுபட்ட திகில் படம். மதுபாலா, ஸ்முருதி வெங்கட், மைம்கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
கே.விஜய் பாண்டி, பி.ஜி.முத்தையா ஆகிய இருவரும் தயாரிக்க, புதுமுக டைரக்டர் அரவிந்த் சீனிவாசன் இயக்கி வருகிறார். 

படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

‘‘ஒரு பெண் திடீரென்று காணாமல் போகிறாள். அவளை கண்டு பிடிக்க கதாநாயகன் துப்பறிவதும், அதனால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதை. இதில் அருள்நிதி, மதுபாலா ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரி களாகவும், ஸ்முருதி வெங்கட் காணாமல் போகும் பெண்ணாகவும் நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படம் முழுக்க முழுக்க சென்னையில் வளர்ந்து வருகிறது.’’