சினிமா செய்திகள்

கனவு படைப்பில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் + "||" + Jacqueline Fernandez in Dream Creation

கனவு படைப்பில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்

கனவு படைப்பில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்
கன்னட நடிகரான கிச்சா சுதீப், சில தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். விஜய் நடித்த ‘புலி’ படத்திலும் வில்லனாக வந்தார்.
அவர் திரைஉலகுக்கு அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில், ‘விக்ராந்த் ரோணா’ என்ற பிரமாண்டமான படத்தில் நடிக்கிறார். ஜாக் மஞ்சுநாத் தயாரிக்க, அனூப் பண்டாரி டைரக்டு செய்கிறார். இந்தப் படத்தில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

இதுபற்றி அவர் கூறியதாவது:
‘‘உலகுக்கு தனித்துவமான ஒரு இந்தியக் கதையை சொல்ல விரும்பும் கனவு படைப்புதான் ‘விக்ராந்த் ரோணா. இதுபோன்ற ஒரு மகத்தான படைப்பின் உருவாக்கத்தில் நானும் இணைந்ததில் மகிழ்ச்சி. திரையரங்கில் மீண்டும் கோலாகல கொண்டாட்டத்தை உருவாக்கும் படமாக இது இருக்கும்.’’