சினிமா செய்திகள்

தெலுங்கு படங்களில் சமுத்திரக்கனிக்கு வில்லன் வாய்ப்புகள் + "||" + In Telugu films To Samuthirakkani Villain opportunities

தெலுங்கு படங்களில் சமுத்திரக்கனிக்கு வில்லன் வாய்ப்புகள்

தெலுங்கு படங்களில் சமுத்திரக்கனிக்கு வில்லன் வாய்ப்புகள்
சமுத்திரக்கனிக்கு இப்போது கைநிறைய படங்கள் உள்ளன. கமல்ஹாசனுடன் இந்தியன் 2, பிரசாந்தின் அந்தகன், சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
நாடோடிகள் படத்தை இயக்கி பிரபலமான சமுத்திரக்கனி போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களையும் டைரக்டு செய்தார். பின்னர் குணசித்திர நடிகராக மாறினார். சமுத்திரக்கனிக்கு இப்போது கைநிறைய படங்கள் உள்ளன. கமல்ஹாசனுடன் இந்தியன் 2, பிரசாந்தின் அந்தகன், சிவகார்த்திகேயனுடன் டான் ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் சமுத்திரக்கனிக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. தெலுங்கில் அவர் வில்லனாக நடித்த அல வைகுந்தபுரம்லூ, கிராக் ஆகிய படங்கள் வெற்றி பெற்றதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான வில்லனாக மாறி உள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் அதிக பொருட் செலவில் தயாராகும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா மற்றும் தேஜா நடிக்கும் படங்களில் நடிக்கவும் சமுத்திரக்கனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவை தவிர மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்கவும் பேசி வருகிறார்கள்.