தனுசின் 44-வது படம்


தனுசின் 44-வது படம்
x
தினத்தந்தி 1 Aug 2021 8:32 PM GMT (Updated: 2021-08-02T02:02:31+05:30)

தனுஷ் நடித்த கர்ணன், ஜெகமே தந்திரம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இந்தியில் அக்‌ஷய்குமாருடன் நடித்துள்ள ‘அந்த்ராங்கி ரே’ திரைக்கு வர தயாராக உள்ளது.

‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது தனுசுக்கு 43-வது படம். இந்த படத்துக்கு மாறன் என்று தலைப்பு வைத்துள்ளனர். அடுத்து 44-வது படமாக மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் ஆகிய படங்கள் வந்துள்ளன. மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இதில் ராஷிகன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். இன்னொரு நாயகி தேர்வு நடக்கிறது. தெலுங்கு இயக்குனர் செகர் கம்முலா டைரக்டு செய்யும் படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படம் 3 மொழிகளில் தயாராக உள்ளது. செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

Next Story