சினிமா செய்திகள்

‘வெப்’ தொடரில் ஆர்யா + "||" + Arya in the Web series

‘வெப்’ தொடரில் ஆர்யா

‘வெப்’ தொடரில் ஆர்யா
‘வெப்’ தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால் முன்னணி நடிகர், நடிகைகள் ‘வெப்’ தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
இந்தியில் உருவான ‘வெப்’ தொடர் மோகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் பரவி உள்ளது. சூர்யா, சித்தார்த், பிரகாஷ்ராஜ், காஜல் அகர்வால், தமன்னா, பிரியாமணி, சோனியா அகர்வால், மீனா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணா உள்ளிட்ட பலர் ‘வெப்’ தொடர்களில் நடித்துள்ளனர். சரத்குமார் இரை என்ற ‘வெப்’ தொடரில் நடிக்கிறார். இந்த நிலையில் ஆர்யாவும் ‘வெப்’ தொடருக்கு வருகிறார். ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இப்போது ஆர்யாவை ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் ‘வெப்’ தொடரில் நடிக்க பேசி உள்ளனர். திகில் கதையம்சம் கொண்ட தொடராக தயாராகிறது. இந்த தொடரில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமண மோசடி புகார்: போலீசுக்கு நன்றி சொன்ன ஆர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா 2019-ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
2. ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஜூலை 22ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
3. சாந்தனுவுக்கு ஆர்யா நடன பயிற்சி அளிப்பாரா?
பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் வாரிசு சாந்தனு, திறமையாக நடனம் ஆடுபவர்.