ரஜினி படத்துக்கு ‘டப்பிங்’ பேசிய மீனா


ரஜினி படத்துக்கு ‘டப்பிங்’ பேசிய மீனா
x
தினத்தந்தி 1 Aug 2021 8:40 PM GMT (Updated: 2021-08-02T02:10:36+05:30)

தொடர்ந்து வீரா, முத்து படங்களிலும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். குசேலன் படத்திலும் நடித்து இருந்தார்.

ரஜினிகாந்த் நடித்து 1984-ல் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்த மீனா 1993-ல் எஜமான் படத்தில் அவருக்கு ஜோடியானார். தொடர்ந்து வீரா, முத்து படங்களிலும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். குசேலன் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். இதில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மேலும் 3 கதாநாயகிகளும் உள்ளனர். ரஜினிக்கு மீனா ஜோடியாக வருகிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து ‘டப்பிங்’ பணிகள் தொடங்கி உள்ளன. ரஜினிகாந்த் சமீபத்தில் ‘டப்பிங்’ பேசி முடித்தார். இந்த நிலையில் நடிகை மீனா தற்போது ‘டப்பிங்’ பணியை தொடங்கி உள்ளார். அவர் ‘டப்பிங்’ தியேட்டரில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

Next Story