சினிமா செய்திகள்

‘டப்பிங்' உரிமையில் கமல் படம் சாதனை + "||" + In the dubbing rights Kamal film record

‘டப்பிங்' உரிமையில் கமல் படம் சாதனை

‘டப்பிங்' உரிமையில் கமல் படம் சாதனை
லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இருவரும் வில்லன்களாகவும், மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் கமல்ஹாசனின் மகனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்துக்கு அனைத்து மொழி திரைப்பட துறையினர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்தியில் விக்ரம் படத்தை ‘டப்பிங்’ செய்து வெளியிடுவதற்கான உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. தற்போது இந்தி ‘டப்பிங்’ உரிமை ரூ.37 கோடிக்கு விலைபோய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய கமல் படங்களின் இந்தி ‘டப்பிங்’ உரிமைக்கான விலையை ஒப்பிடும்போது இது அதிக தொகை என்கின்றனர். இதுபோல் தெலுங்கு, மலையாள மொழிகளுக்கான ‘டப்பிங்’ உரிமை மற்றும் டிஜிட்டல், தொலைக்காட்சி உரிமைகளை வாங்கவும் பலர் விலைபேசி வருகிறார்கள்.