சினிமா செய்திகள்

ஆபாச பட விவகாரம்: ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்வதா...? ஷகிலா பயோபிக் நடிகை கோபம் + "||" + Richa Chadha supports Shilpa Shetty: ‘We’ve made national sport out of blaming women for men’s mistakes’

ஆபாச பட விவகாரம்: ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்வதா...? ஷகிலா பயோபிக் நடிகை கோபம்

ஆபாச பட விவகாரம்: ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்வதா...? ஷகிலா பயோபிக்  நடிகை கோபம்
இந்திப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹன்சல் மேத்தா, ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
மும்பை

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களை தயாரித்து விற்றது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்களை தயாரித்து விற்பனை செய்தது, அதற்காக ஷாட்ஷாட்ஸ் என்ற செயலியை உருவாக்கியதில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவின் மைத்துனர் பிரதீப் பக்‌ஷிதான் அந்த ஆப் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொண்டார் என்றும் இதற்கும் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பில்லை, அவர் அப்பாவி என்றும் ஷில்பா தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களிலும்  இணைய தளங்களிலும் சிலர் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஷில்பா ஷெட்டி ரூ.25 கோடி கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார். 

இதையடுத்து இந்திப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹன்சல் மேத்தா, ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், ’ஷில்பாவுக்கு ஆதரவாக நிற்காவிட்டால் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவரை தனியாக விட்டுவிடுங்கள். சட்டம் முடிவு செய்யட்டும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், நீதி வழங்கப்படுவதற்கு முன்பே குற்றவாளியாக அறிவிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது’ என்று கூறியுள்ளார்.

இதை டேக் செய்துள்ள நடிகை ரிச்சா சதா, ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்லும் தேசிய கலாசாரத்தை  உருவாக்கி இருக்கிறோம். இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி வழக்குத் தொடுத்திருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். நடிகை ரிச்சா சதா, ஷகிலாவின் பயோபிக் உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் வன்கொடுமை : நடிகை ஷில்பா ஷெட்டி -ராஜ் குந்த்ரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்
ஷெர்லின் சோப்ரா ஏப்ரல் 20, 2021 அன்று ஜுஹு காவல் நிலையத்தில் ஆஜராகி ராஜ் குந்த்ராவுக்கு எதிரான தனது வழக்கை வாபஸ் பெற்று இருந்தார்.
2. ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள் ; ரூ.9 கோடிக்கு விற்க திட்டம்
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. 2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய ஐகோர்ட்டு இடை கால தடை விதித்துள்ளது.
4. கணவர் மீதான ஆபாச பட வழக்கு: கருத்து சொல்வதை தவிர்க்கிறேன் -ஷில்பா ஷெட்டி முதல் அறிக்கை
ஷில்பா ஷெட்டி தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதாக ஊடகங்கள் மீதுமும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
5. ராஜ்குந்த்ரா ஆபாச பட வழக்கு கைது பயம் : நடிகை ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் மனு தள்ளுபடி
ராஜ்குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.aந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.