சினிமா செய்திகள்

கணவர் மீதான ஆபாச பட வழக்கு: கருத்து சொல்வதை தவிர்க்கிறேன் -ஷில்பா ஷெட்டி முதல் அறிக்கை + "||" + Shilpa Shetty releases first statement post Raj Kundra's arrest in porn video case

கணவர் மீதான ஆபாச பட வழக்கு: கருத்து சொல்வதை தவிர்க்கிறேன் -ஷில்பா ஷெட்டி முதல் அறிக்கை

கணவர் மீதான ஆபாச பட வழக்கு: கருத்து சொல்வதை தவிர்க்கிறேன் -ஷில்பா ஷெட்டி முதல் அறிக்கை
ஷில்பா ஷெட்டி தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதாக ஊடகங்கள் மீதுமும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மும்பை

ஆபாச பட மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவரது கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு, ஷில்பா ஷெட்டி இன்று (ஆகஸ்ட் 2) தனது முதல் அறிக்கையை வெளியிட்டு உள்ளார். 

ஷில்பா ஷெட்டி தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மீது குற்றம் சாட்டி மும்பை ஐகோர்ட்டில் ரூ.25 கோடி கேட்டு அவதூறு  வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் தனது நிலைப்பாட்டை விளக்கி  அனைத்து வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் மறுத்து  ஒரு அறிக்கையைப் வெளியிட்டு உள்ளார்.  இந்த பிரச்சினையில் அவர் யாரையும் குற்றம் சொல்லவில்லை   என்றும் இது பிரச்சினைக்கு உட்பட்டது என்பதால் தொடர்ந்து பேசுவதைத் தவிர்ப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

ஆபாச வீடியோ வழக்கில் ஒருபோதும் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்ற தத்துவத்தை பின்பற்றுவதாக கூறி உள்ளார்.

ஆமாம்! கடந்த சில நாட்களாக, எல்லா  விவகாரங்களும் சவாலாக இருந்தது. நிறைய வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எங்கள் மீது உள்ளன. ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகளால் என் மீது நிறைய தேவையற்ற  கவனம் செலுத்த பட்டது . எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்துக்கும் நிறைய கேள்விகள் எழுந்தன.  இந்த வழக்கில் கருத்து கூறுவதை  தவிர்க்கிறேன், எனவே தயவுசெய்து என் சார்பாக தவறான மேற்கோள்களைக் கூறுவதை நிறுத்துங்கள். 

நடந்து கொண்டிருக்கும் விசாரணை  மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.ஒரு குடும்பமாக, நாங்கள் அனைத்து சட்ட தீர்வுகளையும் தேடுவோம் . ஆனால், அதுவரை எனது குழந்தைகளுக்காக எங்கள் தனியுரிமையை மதிக்கும்படி, குறிப்பாக ஒரு தாயாக - நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் அரைகுறையாகத் தகவல் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

"நான் கடந்த 29 ஆண்டுகளாக ஒரு சட்டபூர்வமான இந்திய குடிமகனாகவும் கடின உழைப்பாளியாகவும் இருக்கிறேன். தயவுசெய்து சட்டம் அதன் போக்கில் செல்லட்டும் . சத்யமேவ் ஜெயதே!  நன்றியுடன், ஷில்பா ஷெட்டி குந்த்ரா  என அதில் கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ஷெர்லின் சோப்ரா மீது ராஜ் குந்த்ரா- ஷில்பா ஷெட்டி ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு
ஷெர்லின் சோப்ரா அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் புகார் அளித்து உள்ளார்.
2. பாலியல் வன்கொடுமை : நடிகை ஷில்பா ஷெட்டி -ராஜ் குந்த்ரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்
ஷெர்லின் சோப்ரா ஏப்ரல் 20, 2021 அன்று ஜுஹு காவல் நிலையத்தில் ஆஜராகி ராஜ் குந்த்ராவுக்கு எதிரான தனது வழக்கை வாபஸ் பெற்று இருந்தார்.
3. ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள் ; ரூ.9 கோடிக்கு விற்க திட்டம்
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. 2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய ஐகோர்ட்டு இடை கால தடை விதித்துள்ளது.
5. ஆபாச பட விவகாரம்: ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்வதா...? ஷகிலா பயோபிக் நடிகை கோபம்
இந்திப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹன்சல் மேத்தா, ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.