ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் தேசபக்தி பாடல்


ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் தேசபக்தி பாடல்
x
தினத்தந்தி 2 Aug 2021 8:44 PM GMT (Updated: 2021-08-03T02:14:21+05:30)

இந்திய சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் 15-ந்தேதி தொடங்குகிறது.

ஏற்கனவே 50-வது சுதந்திர தினத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து வரிகளில் ‘தாய்மண்ணே வணக்கம்’ பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.

இதுபோல் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் உள்ள சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஜி.வி.பிரகாஷ் இசையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் இன்னொரு பாடல் உருவாகிறது. இந்தியாவில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் இந்த பாடல் காட்சியில் பங்குபெறுகிறார்கள். ஏ.ராஜசேகர் இயக்கத்தில், அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் இந்த பாடல் உருவாகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பல்வேறு இடங்களில் இப்பாடல் படமாக்கப்பட உள்ளது.

Next Story