சினிமா செய்திகள்

ரஷியாவில் விஜய், அஜித் படப்பிடிப்புகள் + "||" + In Russia Vijay and Ajith shootings

ரஷியாவில் விஜய், அஜித் படப்பிடிப்புகள்

ரஷியாவில் விஜய், அஜித் படப்பிடிப்புகள்
விஜய் பீஸ்ட் படத்திலும், அஜித்குமார் வலிமை படத்திலும் நடித்து வருகிறார்கள். வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரு சண்டை காட்சி மட்டும் பாக்கி உள்ளது.
கொரோனாவால் படக்குழுவினர் வெளிநாடு செல்வது தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் வலிமை சண்டை காட்சியை ரஷியாவில் படமாக்க தயாராகி உள்ளனர். இதற்காக அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷியா செல்ல இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதுபோல் பீஸ்ட் படக்குழுவினரும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ரஷியாவில் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜார்ஜியாவில் பீஸ்ட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தநிலையில் தற்போது பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடுத்த மாதம் பீஸ்ட் படக்குழுவினர் ரஷியா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விஜய், அஜித் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் ரஷியாவில் நடக்கலாம் என்று தெரிகிறது. அப்போது இருவரும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.