சினிமா செய்திகள்

169-வது படத்துக்கு தயாராகும் ரஜினி + "||" + Getting ready for the 169th film Rajini

169-வது படத்துக்கு தயாராகும் ரஜினி

169-வது படத்துக்கு தயாராகும் ரஜினி
படத்தை இயக்குவது யார்? தயாரிக்கும் பட நிறுவனம் எது? போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு 169-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை இயக்குவது யார்? தயாரிக்கும் பட நிறுவனம் எது? போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு கதாநாயகி மற்றும் இதர நடிகர் நடிகைகள் தேர்வை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார்கள். ரஜினியின் புதிய படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.

தற்போது தேசிங்கு பெரியசாமிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமியை ரஜினியும் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது அவர் சொன்ன புதிய கதையொன்று ரஜினிக்கு பிடித்து போனதால் அதில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் 169-வது படத்தை தயாரிக்க 3 பட நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பட்ஜெட் விவரங்களை அவை கேட்டு இருப்பதாகவும் சில தினங்களில் தயாரிப்பது யார்? என்பது முடிவாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.