தனது மகனுக்கு 'குகன் தாஸ்' என பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்


தனது மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 3 Aug 2021 3:08 PM GMT (Updated: 2021-08-03T20:38:56+05:30)

நடிகர் சிவகார்த்திகேயன், தனது மகனுக்கு 'குகன் தாஸ்' என பெயர்சூட்டியுள்ளார்

சென்னை,

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற 8 வயது மகள் உள்ள நிலையில், கடந்த ஜூலை 12-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் சூட்டி இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகனின் நெற்றியில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தை பிறந்தபோது ‘18 வருடங்களுக்குப் பிறகு அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்’ என்று தெரிவித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது தனது தந்தையின் பெயரான ‘தாஸ்’ என்பதை தனது மகனுக்கு சூட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story