சினிமா செய்திகள்

ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்த 'நாங்க வேற மாறி' பாடல் + "||" + The song 'Nanga Vara Maari' which has crossed one crore viewers

ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்த 'நாங்க வேற மாறி' பாடல்

ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்த 'நாங்க வேற மாறி' பாடல்
'நாங்க வேற மாறி' பாடல் கடந்த இரு நாட்களுக்கு முன் யூடியூபில் சோனி மியூசிக் பக்கத்தில் வெளியானது.
சென்னை,

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை. இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் முதல் பாடல் கடந்த இரு நாட்களுக்கு முன் யூடியூபில் சோனி மியூசிக் பக்கத்தில் வெளியானது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவான " நாங்க வேற மாறி " என்கிற இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பறை பெற்றுள்ளது. முன்னதாக 10 லட்சம் விருப்பங்களை பெற்றும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.