சூர்யா நடிக்கும் 'ஜெய் பீம் ' நவம்பர் 21 ஆம் தேதி வெளியீடு


சூர்யா நடிக்கும் ஜெய் பீம்  நவம்பர் 21 ஆம் தேதி வெளியீடு
x
தினத்தந்தி 5 Aug 2021 7:43 AM GMT (Updated: 2021-08-05T13:13:14+05:30)

'ஜெய் பீம் ' திரைப்படத்தை இந்தாண்டு நவம்பர் 21 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் அவரது 2டி எண்டர்டெயிமெண்ட் தயாரிப்பில் ஞானவேல் இயக்கி உருவாகிவரும் படம் ’ஜெய்பீம்’. இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். ஜெய் பீம்' திரைப்படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியானது. 

படத்தின் டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றது.  இந்தப்படத்தின் தலைப்பு வைரலாகியுள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் நடிகர் அருண் விஜய்யின் மகன் நடிகராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் என்கிற தகவலும் வெளியான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப் படும் 'ஜெய் பீம்' திரைப்படத்தை இந்தாண்டு நவம்பர் 21 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

Next Story