சினிமா செய்திகள்

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’; போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் கதை + "||" + ‘Taanakkaran’ starring Vikram Prabhu; The story of students joining police training

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’; போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் கதை

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’; போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் கதை
‘‘விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக் காரன்’, போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் கதை’’ என்று அந்தப் படத்தின் டைரக்டர் தமிழ் கூறினார். இவர் டைரக்டர் வெற்றிமாறனிடம் உதவி டைரக்டராக இருந்தவர்.
‘டாணாக்காரன்’ பற்றி அவர் மேலும் சொல்கிறார்:-

‘‘போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களை பற்றி முழுமையாக எந்த படத்திலும் இதுவரை கதை சொல்லப்படவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு நிகராக, போலீஸ் பயிற்சி பெறும் மாணவர்களின் வாழ்க்கை யிலும் சுவாரசியங்கள் உண்டு.வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல், வித்தியாசமான கோணத்தில் இருக்கும். எனக்கு ஏராளமான போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்த அனுபவங்களை சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, பொழுதுபோக்கான படைப்பாக, இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன்.

உடல் ரீதியாக கடுமையான உழைப்பை கொடுத்து நடித்து இருக்கிறார், விக்ரம் பிரபு. இவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இவர்களுடன் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.’’

தொடர்புடைய செய்திகள்

1. விக்ரம் பிரபு நடிக்கும் 'டாணாக்காரன்' படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'டாணாக்காரன்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.