சினிமா செய்திகள்

49 வருடங்களுக்குப்பின் மீண்டும் ‘காசேதான் கடவுளடா’ + "||" + 49 years later again ‘kasethan kadavulada’

49 வருடங்களுக்குப்பின் மீண்டும் ‘காசேதான் கடவுளடா’

49 வருடங்களுக்குப்பின் மீண்டும் ‘காசேதான் கடவுளடா’
மறைந்த நடிகர்கள் முத்துராமன், தேங்காய் சீனிவாசன் மற்றும் ஸ்ரீகாந்த், லட்சுமி, மனோரமா ஆகியோர் நடித்து 1972-ம் ஆண்டில் திரைக்கு வந்த படம், ‘காசேதான் கடவுளடா.’ 49 வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த இந்தப் படம், மீண்டும் அதே பெயரில் படமாகிறது.
முத்துராமன் நடித்த வேடத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் நடித்த வேடத்தில் யோகி பாபு, ஸ்ரீகாந்த் நடித்த வேடத்தில் கருணாகரன், லட்சுமி நடித்த வேடத்தில் பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ஊர்வசி, மனோபாலா, தலைவாசல் 
விஜய் ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள். படத்தை தயாரித்து டைரக்டு செய்பவர், கண்ணன்.

இவர் கூறுகையில், ‘‘குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறோம். 45 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.’’

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார், தி.மு.க எம்.எல்.ஏ சிவா
புதுச்சேரி சட்டமன்ற தி.மு.க. தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் சிவா எம்.எல்.ஏ. எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்.