சினிமா செய்திகள்

மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள் + "||" + 4 heroines landing on the field for the people issue

மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள்

மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள்
திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கியவர், சுந்தர்பாலு. இவர் அடுத்து இயக்கிய படத்துக்கு, ‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னாசவேரி, சுபிக்‌ஷா ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி டைரக்டர் சுந்தர்பாலு கூறிய தாவது:-

‘‘கன்னித்தீவு என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில், மிகவும் பிரபலமானது. ‘கன்னித்தீவு’ என்றாலே துணிச்சல் என்பதால், படத்துக்கு இந்த பெயரை வைத்தோம். படத்தில் 4 கதாநாயகிகள் இருப்பதால், பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். படத்தின் உச்சக்கட்ட காட்சியை ஒரு தீவில் படம்பிடித்து இருக்கிறோம். வடசென்னையில் உள்ள ஒரு வீட்டு வசதி குடியிருப்பில் வசிக்கும் 4 பெண்களை பற்றிய கதை, இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளாக இருக்கும் அவர்கள் 4 பேரும் சமூக அக்கறை உள்ளவர்கள். அந்தப் பகுதியில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினையை தீர்க்க போராட்டத்தில் குதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறுகிறது. அதை தோழிகள் 4 பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே கதை. இந்தப் படத்தை கிருத்திகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.’’