சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி-யோகி பாபுவுடன் ‘யாவரும் வல்லவரே’ + "||" + Samuthirakani-Yogi Babu with 'Yavarum Vallavare'

சமுத்திரக்கனி-யோகி பாபுவுடன் ‘யாவரும் வல்லவரே’

சமுத்திரக்கனி-யோகி பாபுவுடன் ‘யாவரும் வல்லவரே’
‘வால்டர்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களை கொடுத்தவர், பிரபு திலக். இவர் தற்போது அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ படத்தை வெளியிட இருக்கிறார். அடுத்ததாக இவர், ‘யாவரும் வல்லவரே’ என்ற படத்தை வழங்க உள்ளார்.
இதில் சமுத்திரக்கனி, யோகி பாபு இணைந்து நடிக்கிறார்கள். இதுபற்றி பிரபு திலக் கூறியதாவது:-

‘‘யாவரும் வல்லவரே, வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு. டைரக்டர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது, அவருடைய ‘ஐடியா’வும், படம் குறித்த பார்வையும் மிகவும் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். எதிர்பாராத பல திருப்பங்களும், கதையின் போக்கில் அவிழும் பல முடிச்சுகளும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தின. உடனடியாக படத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ.மல்லூரி, ரித்விகா, தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜோசப் ராஜ் தயாரிக்கிறார்.’’

தொடர்புடைய செய்திகள்

1. சமுத்திரக்கனி மகன் வருகிறார்
நடிகர், டைரக்டர் சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன்.