சினிமா செய்திகள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம்மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு' + "||" + Produced by Ishri Ganesh Directed by Gautam Menon new film

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம்மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு'

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம்மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு'
கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். படம் பற்றி ஐசரி கணேஷ் கூறும்போது, “வெந்து தணிந்தது காடு படத்தை தயாரிப்பது உற்சாகம் அளிக்கிறது. கவுதம் மேனன் கதையை கூறும்போது முற்றிலும் வித்தியாசமாக அவரது வழக்கமான கதைகளில் இருந்து வேறுவிதமான திரைக்கதையை கொண்டு இருந்தது. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசை எப்போதும் மாயாஜாலத்தை நிகழ்த்தும். இந்த படத்தில் அவரது இசை இன்னும் சிறப்பாக இருக்கும்.

எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் படமாகவும் இருக்கும். அதிரடி படமாக கிராமம் மற்றும் நகர பின்னணியில் கதை நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. வெந்து தணிந்தது காடு புகழ்பெற்ற பாரதியார் பாடலின் வரியாகும். படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி உள்ளது'' என்றார்.