கேரளாவில் வசிக்கும் கன்னியாகுமரி கதாநாயகி!


கேரளாவில் வசிக்கும் கன்னியாகுமரி கதாநாயகி!
x
தினத்தந்தி 8 Aug 2021 3:08 AM GMT (Updated: 2021-08-08T08:38:51+05:30)

மஞ்சுவாரியர் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது நடிப்பை தொடர்ந்தார்.

நடிகர் திலீப்பை விட்டு பிரிந்த பின், மஞ்சுவாரியர் தனது இரண்டாவது ரவுண்டை மலையாள பட உலகில் எதிர்பார்ப்புடன் தொடங்கினார். அவர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது நடிப்பை தொடர்ந்தார்.

அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. இந்த வெற்றிகள், அவருக்கு ‘ராசியான கதாநாயகி’ என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது. ‘அசுரன்’ (தமிழ்) படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்தது.

‘‘அந்த படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ஒரே மாதிரியான கிராமத்து கதைகளாக இருந்ததால், நடிக்க சம்மதிக்கவில்லை’’ என்று கூறும் மஞ்சுவாரியர் தன்னை கேரளாவில் வசிக்கும் தமிழ் பெண் என்கிறார். அவருடைய சொந்த ஊர், கன்னியாகுமரியாம்!

Next Story