கொரோனா விதிமீறல்: நடிகர் மம்முட்டி மீது வழக்கு


கொரோனா விதிமீறல்: நடிகர் மம்முட்டி மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Aug 2021 12:18 AM GMT (Updated: 2021-08-09T05:48:01+05:30)

கொரோனா விதிமீறல்: நடிகர் மம்முட்டி மீது வழக்கு.

முன்னணி மலையாள நடிகரான மம்முட்டி தமிழில், அழகன், மவுனம் சம்மதம், தளபதி, கிளிபேச்சு கேட்கவா, மக்களாட்சி, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மம்முட்டி இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடந்த தனியார் ஆஸ்பத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த விழாவில் 300-க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர். மம்முட்டியை காணவும் ஏராளமானோர் திரண்டனர். கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் அரசு திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் 25 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என்றும் அரசியல் கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் மம்முட்டி கொரோனா கட்டுப்பாடுகளை மீறி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறியதாக மம்முட்டி மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகிகள் உள்பட 300 பேர் மீது ஏலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story