சிக்கலில் சூர்யா படம்


சிக்கலில் சூர்யா படம்
x
தினத்தந்தி 9 Aug 2021 12:59 AM GMT (Updated: 2021-08-09T06:29:01+05:30)

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று படம் ஓ.டி.டியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று படம் ஓ.டி.டியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. சூர்யாவின் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. சூரரை போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக சூர்யா அறிவித்தார். இந்தியில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க ஷாகித் கபூரை அணுகினர். அவர் ரூ.30 கோடி சம்பளம் கேட்டதாகவும், இதனால் அவருக்கு பதில் அக்‌ஷய்குமாரிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சூரரை போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் அளித்துள்ள விளக்கத்தில், ‘பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிக பணம் பெறும் நோக்கிலும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பு நியாயங்களை நிரூபிக்க அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story