சினிமா செய்திகள்

கணவருக்காக மாறிய காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal who changed for her husband

கணவருக்காக மாறிய காஜல் அகர்வால்

கணவருக்காக மாறிய காஜல் அகர்வால்
கணவருக்காக மாறிய காஜல் அகர்வால்.
நடிகை காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

''எனது சினிமா வாழ்க்கையில் ஓய்வு இல்லை. 3 படங்கள் 6 ‘லொகேஷன்கன்’ என்று ஓடிக்கொண்டு இருக்கிறேன். கடந்த வருடம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்த பிறகு சொந்த வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்காமலேயே சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா தெலுங்கு படத்தில் நடிக்க போய் விட்டேன். அதன்பிறகு கணவருடன் சேர்ந்து ஒரு சிறிய பயணம் போய் வந்த பிறகு மீண்டும் படங்களில் நடிப்பது. நடித்து முடித்த படங்களை விளம்பரம் செய்வது என்று ‘பிசி’யாகவே வாழ்க்கை நகர்கிறது. இதனால் சொந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியாத வருத்தம் உள்ளது. கவுதம் கிச்சலுவுக்காக சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இப்போது தமிழில் ஹேய் சினாமிகா, கருங்காப்பியம், கோஷ்டி படங்களில் நடித்து முடித்து விட்டேன். அடுத்து ஆச்சார்யா, அதன்பிறகு நாகார்ஜுனா கதாநாயகனாக நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டி உள்ளது. அதற்குமுன்பு கணவருக்காக கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் படங்களில் நடிப்பேன்’'


இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்
வில்லியாக நடிக்கும் காஜல் அகர்வால்.
2. பேய் வேடத்தில் நடிக்க 4 மணி நேரம் ‘மேக்கப்’ போட்ட காஜல் அகர்வால்
‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், ஏறக்குறைய எல்லா பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.